வியாழன், 31 ஜூலை, 2014

நமது உடலை பற்றி தெரிந்ததும் தெரியாததும்....

நமது உடலை பற்றி தெரிந்ததும் தெரியாததும்....
* நமது மூக்கினால் 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். ஆனால் தூங்கும் போது நமது மூக்கினால் வாசனை பிடிக்க முடியாது.
* நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலைவிட இரவில் மூளை சுறுசுறுப்பான இருக்கும். அதிகமாக சிந்தனைகள் தோன்றும். வலி என்ற உணர்வே மூளையின் உதவியால் தான் உணரப்படுகிறது. ஆனால் மூளையில் காயம்பட்டால் வலி தெரியாது.
* சராசரி மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் 4 கனவுகள்.
* நாம் ஒரு அடியை எடுத்து வைக்கும் போது நமது உடலில் 200 தசைகள் செயல்படுகின்றன.
* நமது கண்விழியின் சராசரி எடை 28 கிராம் இருக்கும்.
* தும்மும் போது நமது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது. மூக்குத் துவாரங்களை மூடிக்கொண்டு முனக முடியாது.
* நம்மால் வாசனை பிடிக்க முடியாத நிலை அனோஸ்மியா எனப்படுகிறது. அதிகமாக வாசனை பிடிக்கும் சக்தியை ஹைபரோஸ்மியா என்கிறார்கள்.
* நமது உடலில் 'உவுலா' என்ற உறுப்பு எங்கிருக்கிறது தெரியுமா? அடிநாக்கு பகுதியில் நாக்கின் மேற்புறம் காணப்படும் சிறுதசையே 'உவுலா' எனப்படுகிறது. நாம் இதனை உள்நாக்கு என்கிறோம். மனித உடலில் உள்ள உறுதியான தசை நமது நாக்குதான்.
* பிறக்கும் போது நமது உடலில் 300 எலும்புகள் இருக்கின்றன. ஆனால் வளர்ச்சி அடைந்த மனித உடலில் 206 எலும்புகளே உள்ளன. பல எலும்புகள் ஒன்றிணைந்து விடுவது தான் இதற்கு காரணம்.
* எலும்புகள் வலிமையானவை என்று எண்ணுகிறீர்களா? அதன் வெளிப்புறமே கடினமானது. உப்புறம் எலும்புகள் மென்மையாகத்தான் இருக்கும். ஏனெனில் எலும்புகள் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. மனித எடையில் எலும்புகளின் பங்கு 14 சதவீதமாகும்.
* நமது ரத்தம் தண்ணீரை விட 6 மடங்கு அடர்த்தியானது. பெண்களின் உடலில் 4.5 லிட்டர் ரத்தமும், ஆண்களின் உடலில் 5.6 லிட்டர் ரத்தமும் காணப்படுகிறது.
* நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ஒன்றிணைத்தால் 60 ஆயிரம் மைல்கள் நீளத்திற்கு இருக்கும்.
* சிறுநீரகம் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தினமும் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது
.* ஒவ்வொரு மனிதனின் கைரேகையைப் போலவே கால்ரேகை மற்றும் நாக்கு ரேகைகள் தனித்தன்மை வாய்ந்தவை.

சிறுநீரகக் கற்களைக் கரைக்க - இயற்கை வைத்தியம்:-

சிறுநீரகக் கற்களைக் கரைக்க - இயற்கை வைத்தியம்:-
சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிவிட்டால் அது கடுமையான அவதியைக் கொடுத்துவிடும் என்பது, அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். சிறு நீரகக் கற்களைக் கரைக்க உதவும் சில சித்தவைத்திய முறைகள்...
வாழைத்தண்டு சாறு:
வாழைத் தண்டு சிறுநீரகக்கல் வராமல் தடுக்கவும், வந்தால் அது கரைந்து விடவும் கூடியது. எனவே வாழைத்தண்டுச் சாறு எடுத்து, தினமும 3 வேளைகளில் குடித்து வந்தால் சிறுநீரகக்கல் கரைந்துவிடும். வாழைத்தண்டு மட்டுமல்லாது வாழைப்பூவும் சிறுநீரகத்துக்கு நல்லது.
பிரஞ்சு பீன்ஸ்:
இதை விதைகளை நீக்கிவிட்டு நன்றாக கொதிக்க வைத்து, பின் நன்றாக அரைத்து தினம் 3 நேரம் குடித்துவிட்டு 15 நிமிடம் கழித்து 4 தம்ளர் நீர் அருந்த வேண்டும். இதனால் நாளடைவில் சிறுநீர் கற்கள் உடைபட்டு சிறுநீருடன் வெளிவந்துவிடும். அது வெளி வரும் நேரம் நல்ல வலி இருக்க வாய்ப்புள்ளது. நீர் அதிகம் குடித்தால் சீக்கிரம் வெளிவந்து விடும்.
வாழைச்சாறு:
சரியான முறைப்படி வாழைமரத்தின் கீழ் தோண்டி அதன் வேரை அறுத்து, ஒரு சிறிய பாலிதீன் பை அல்லது சிறிய பிளாஸ்டிக் கன்டைனரில் அந்த வேர்கள் இருக்கும்படி வைத்துக் கட்டிவிட்டு அடுத்த நாள் காலையில் சென்று பார்த்தால் வேரின் வழியாக சாறு வடிந்திருப்பதை காணலாம். அதை அப்படியே குடித்துவிட்டால் போதும்.
துளசி:
துளசி இலையின் சாறு எடுத்து அதனு டன் தேன் கலந்து ஆறு நாட்கள் உட்கொண்டால் சிறுநீரகக்கல் உடையும்.
மாதுளை:
இந்த பழத்தின் விதையைப் பிழிந்து 2 ஸ்பூன் கொள்ளுச் சாறுடன் (ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதாசாரத்தில்) சேர்த்து சாப்பிட்டால் கல் கரையும். அத்திப்பழம்: இதை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வரலாம்
  • உத்திரவாதமான பயன் தொகையுடன் இலாப பங்கும் இணைந்து கிடைக்க கூடிய திட்டம்.
  • பாலிசி காலத்தில் காப்பீடும், முதிர்வு தேதியில் பென்சன் பெறும் வகையிலும் அமைந்த திட்டம்.
    call :9443014015
  • P SELLATHURAI
  • CHIEF ADVISOR- LIC